ஆரீ வனப் பகுதி குறித்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

07 October 2019 அரசியல்
aareyforest.jpg

மும்பையின் நுரையீரலாக விளங்கும், ஆரி வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து உள்ளது.

மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஆரி எனும் வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்ட, மஹாராஷ்ட்ரா அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இருப்பினும், ஒரு சில மரங்களை வெட்டிய நிலையில், இது பற்றி அறிந்த அப்பகுதி மக்களும், தன்னார்வலர்களும் போராடா ஆரம்பித்தனர்.

மரத்தை வெட்டக் கூடாது எனவும், அப்பகுதியில் ஆரி வனப்பகுதியினை தொந்தரவு செய்யக் கூடாது எனவும் கோஷம் எழுப்பினர். இதனால், சுமார் 29 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு குழுமியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

தற்பொழுது அங்குத் தேர்தல் நடைபெற இருப்பதால், சிவசேனா கட்சியினர் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அப்பகுதியைப் பாதுகாப்போம் எனவும் உறுதியளித்தனர். இதனால், இந்த விஷயம் பெரிதானது.

இதனை இன்று காலை சிறப்பு அமர்வு மூலம் விசாரித்த உச்சநீதிமன்றம், அப்பகுதியில் மரங்கள் வெட்ட இடைக்காலத் தடை விதித்துள்ளது.

HOT NEWS