ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 4 முடிவிற்கு வந்தது. அதிக வாக்குகளை பெற்ற ஆரி இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
105 நாட்களாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நடைபெற்றது. அதில், நடிகர் ஆரி, ரியோ, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், ரேகா, சோம் சேகர், ஷிவானி நாராயணன், பாலாஜி முருகதாஸ், பாடகர் வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித், சுசித்ரா, சனம் செட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஆரி, ரியோ, ரம்யா பாண்டியன், சோம் சேகர், கேப்ரியல்லா பாலாஜி முருகதாஸ் ஆகியோரைத் தவிர்த்து மீதமிருந்த 11 பேரும் வெளியேறினர்.
இவர்களில் ஆரி அல்லது பாலாஜி முருகதாஸ் இடையில் தான், வெற்றியாளருக்கான போட்டியானது நடைபெற்றது. பலரும் பாலாஜி முருகதாஸே வெல்வார் எனவும், ஆரியே வெல்வார் எனவும் சமூக வலைதளங்களில் தங்களுடையக் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தனர். நேற்று மாலையிலேயே பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் நிறைவு நாள் ஆரம்பித்தது. கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டார்.
அதில், ஆடல், பாடல் என பல நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன. பின்னர், இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 23 கோடியே 83 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவருடன் ஒப்பிடுகையில் பாலாஜிக்கு 6.5 கோடி வாக்குகளேக் கிடைத்துள்ளன. இது மாபெரும் வித்தியாசம் எனவும், இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெருகின்ற முதல் பிக்பாஸ் போட்டியாளர் எனவும் ஆரி புகழப்பட்டு வருகின்றார்.
கமல்ஹாசன் சார்பில் ஆரிக்கு பேனா மற்றும் டைரியும், பாலாஜிக்கு டம்புள்சையும், ரியோவிற்கு டென்ட்டையும், சோம் சேகருக்கு ட்ரம்மையும், ரம்யாவிற்கு இயற்கை விதைகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். இதனை, தற்பொழுது பிக்பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.