வருகின்ற 2024ம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ம் பாகத்தினை உருவாக்க உள்ளதாக, இயக்குநர் செல்வராகவன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, நடிகை ஆன்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், பல சாகசக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது படம் வெளியானக் காலத்தில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. படத் தயாரிப்பாளருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், பாகுபலி படம் வெளியான பிறகு, தமிழ் மக்கள் அனைவருமே இந்தப் படத்தினைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இந்த சூழலில், இந்தப் படத்தின் 2வது பாகம் எப்பொழுது வெளியாகும் என, பலரும் கேள்விக் கேட்டு வந்தனர். அதற்கு நீண்ட காலமாக அமைதி காத்து வந்த இயக்குநர் செல்வராகவன், அதற்கானப் பதிலை தற்பொழுது தந்துள்ளார். அதன்படி, வருகின்ற 2024ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், இந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2வது பாகமானது உருவாக உள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவனின் தம்பி தனுஷ் நடிக்க உள்ளார் எனவும், அவர் கூறியுள்ளார்.
இதனால், இந்தப் படத்தினை எதிர்பார்த்தவர்கள் மட்டுமின்றி, தனுஷின் ரசிகர்களும் குஷியாகி உள்ளனர்.