ஜூன் 21 சூரியகிரகணம்! எல்லையில் பதற்றம் உண்டாகும்! அபிஹியாவின் கணிப்பு!

06 June 2020 அரசியல்
june21eclipse.jpg

ஜூன் 21ம் தேதி அன்று, சூரிய கிரகணம் வர உள்ளது. இது இந்தியாவில் தெரியும் என்றுக் கூறப்படுகின்றது. இது குறித்து, இந்தியா அளவில் பிரபலமடைந்த சிறுவனான அபிஹியா ஆனந்த் புதிய கணிப்பு ஒன்றினைக் கணித்து வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய யூடியூப் சேனலில், இது குறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கனடா என்ற மொழிகளில் மொழிபெயர்த்தும் கூறியுள்ளனர். அவருடையப் பதிவில், இந்த சூரிய கிரகணம் ஆபத்தானது அல்ல எனவும், இது உலகினை காப்பாற்றக் கூடியது எனவும் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி நடைபெற்றது போல் இருக்காது எனவும், இது முற்றிலும் நன்மைகளை வழங்கக் கூடியது எனவும் கூறியுள்ளார்.

எனவே பயப்படத் தேவையில்லை எனவும், இந்த கிரகணம் காலையில் 10.20 மணிக்கு ஆரம்பித்து முழு சூரிய கிரகணம்12.02 தெரியும் எனவும், மதியம் 1.49 மணிக்கு முடியும் எனவும் கூறியுள்ளார். இந்த சூரிய கிரகணத்தால் விவசாயம், பயிர்கள் பாதிக்கப்படலாம் எனவும், பொருளாதாரம் பாதிக்கப்படலாம் எனவும், கிரகணம் ஏற்படுகின்ற பகுதிகளில் மட்டுமே வயிற்று உபாதைகள் ஏற்படும் எனவும், முக்கியமாக சீன இந்தியப் பிரச்சனைகள் தீவிரமடையக் கூடும் என்றும் கணித்துள்ளார்.

இந்த சூரிய கிரகணத்தால், வட இந்தியா அதிகளவிலான பாதிப்பினை கொண்டு இருக்கும். டெல்லியின் வடக்குப் பகுதிகள் கவனமாக இருக்க வேண்டும். சக்தி வாய்ந்தப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். உலகளாவிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் உண்டாகும். இந்த நேரங்களில் அவசரத் தேவைகளைத் தவிர்த்து, தேவையற்ற உணவுப் பொருட்களை உண்ட வேண்டாம் எனவும், கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது. மந்திரங்களைத் தவிர வேறு எதனையும் உச்சரிக்கக் கூடாது என்றுக் கூறியுள்ளார்.

இந்த சூரியக் கிரகணம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, எத்தியோப்பியா, காங்கோ, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த நேரங்களில் எவ்விதமான மந்திரங்களினை உச்சரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த சூரியக் கிரகண ஒளி நம்மீது படக் கூடாது எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS