நோபல் பரிசு வென்ற அமெரிக்க வாழ் இந்தியர்! குவியும் பாராட்டுக்கள்!

15 October 2019 அரசியல்
nobelprize.jpg

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய அபிஜித் பேனர்ஜி என்பவர், பொருளாதரத் துறைக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார். அவருடன் அவர் மனைவி உட்பட, மொத்தம் மூன்று பேர் இந்த ஆண்டு பொருளாதாரப் பிரிவிற்காக, நோபல் பரிசு பெற உள்ளனர்.

1961ல் மும்பையில் பிறந்த அபிஜித் பேனர்ஜி, அமெரிக்காவில் பொருளாதாரத் துறையில் பயின்று ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். பின்னர், அமெரிக்காவிலேயே செட்டிலாகவிட்டார். அவருடைய மனைவி பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்தவர்.

இருவரும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல புத்தகங்களை எழுதி உள்ளனர். மேலும், உலகளாவிய வறுமையை போக்குவதற்கு தேவையான திட்டத்தையும், வழியையும் தீட்டியதைப் பாராட்டி இந்த முறை, அபிஜித் பேனர்ஜி, அவருடைய மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நோபல் பரிசுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ஆறு கோடியே 52 லட்ச ரூபாய் ஆகியவை வழங்கப்படும். இவை, அந்த மூன்று பேருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. தற்பொழுது, அபிஜித் பேனர்ஜிக்கு, இந்தியத் தலைவர்கள் தங்களுடையப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவர், கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இதனால், அப்பல்கலைக் கழகமும் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜியும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS