நடிர் ஆரி நடித்துள்ள தமிழ் சினிமாவின் முதல் இலுமினாட்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கானது, தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் ஆரி நடித்திருக்கும் திரைப்படம் பகவான். இந்தப் படத்தினை அம்மன்யா மூவிஸ் தயாரிக்கின்றது. இந்தப் படத்தினை காளிங்கன் இயக்கியுள்ளார். இதில், பூஜிதா பொன்னாடா, நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பிரபங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங்கானது, இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கானது தற்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் நடிகர் ஆரி, ஆங்கிலேயே நடிகர்களைப் போல மாஸாக இருக்கின்றார். இன்னும் இறுதிக் கட்டக் காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளதால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததும் படத்தின் கடைசி கட்ட சூட்டிங்கானது நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தான், தமிழில் வெளியாகின்ற முதல் இலுமினாட்டி திரைப்படம் ஆகும். இதனை, அப்படக் குழுவானது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து உள்ளது.