நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பலப் பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் எனப் பல முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் நடிகர் அர்ஜூனின் உறவினரும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணமடைந்தார்.
மேலும் அவருடையக் குடும்பத்தாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.