தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
தெலுங்கில் தற்பொழுது ஆச்சார்யா என்றப் படத்தில், நடிகர் சிரஞ்சீவி நடித்து வந்தார். அவருக்கு, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகின்றார். தற்பொழுது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆச்சார்யா படப்பிடிப்பானது, விறுவிறுப்பாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பிடிப்பினை துவங்குவதற்கு முன்பு, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளியான முடிவில், நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவி தன்னைத் தானே தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.