நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போனினை, மர்ம கும்பங்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கார்த்திக்கின் மகனும், நடிகருமான கௌதம் கார்த்திக் தன்னுடையக் குடும்பத்துடன் போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகின்றார். கடல், தேவராட்டம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்டப் படங்களில் அவர் நடித்திருந்தார். தற்பொழுது சில படங்களில் நடித்து வருகின்றார். அவர் தினமும் தன்னுடைய ஸ்மார்ட் சைக்களில் சைக்கிளிங் செல்வது வழக்கம்.
அவ்வாறு அவர் நேற்று வழக்கம் போல் செல்கையில், ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் டிடிகே சந்திப்பில், அவரை மர்மக் கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. அதில், அவரைக் கீழே தள்ளிய அந்தக் கும்பல், அவரிடம் இருந்து சாம்சங் போனினை பறித்துக் கொண்டது. இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைந்திருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.