பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், நோய் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் இர்பான் கான்(53), இவர் ஜூரசிக் வேர்ல்ட், லைப்ஆப் பை உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர். இந்திய அளவில் பிரபலமான நடிகர். இவர், பலக் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்துப் பெருமை பெற்றவர். இவருடைய தாய், 25ம் தேதி அன்று, உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால், ராஜஸ்தானில் உள்ள தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாமல், மும்பையில் கஷ்டப்பட்டார். மொபைலிலேயே, தாயின் இறுதி மரியாதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இந்நிலையில், திடீரென்று நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கொரோனா வைரஸ் என் புரளிகள் கிளம்பின. இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த காலங்களில், புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வென்ற அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் பெருங்குடலில் தொற்று ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் கூறினர். அவருக்கு, கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அவர் மரணமடைந்தார். இதனை, மருத்துவமனை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதனால், பாலிவுட் உலகமே, சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரின் மறைவிற்கு இறங்கல் தெரிவித்துள்ளனர்.