அஜித்குமாரின் வலிமை படத்தில் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமளிக்கின்றது என, நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தின் சூட்டிங், தற்பொழுது விரைவாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்களின் தேர்வானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
இதில், பல திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். இதில், நடிகர் பிரசன்னாவும் கலந்து கொண்டு நடித்துக் காட்டியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் நம்பிக்கையுடன் இருந்து வந்தார். இது குறித்து, சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் உலா வந்தன.
அவைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, வலிமை படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எனக் கூறியிருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனை, வருத்தத்துடன், தன்னுடைய டிவிட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா. அவர் கூறுகையில், அஜித் படத்தில் நடிக்காதது வருத்தம் அளிக்கின்றது. இருந்தாலும், விரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.