அஜித்திடம் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன் என, பிரபல மலையாள நடிகர் பிரித்வி ராஜ் மனம் திறந்துள்ளார்.
அவர், தற்பொழுது டிரைவிங் லைசென்ஸ் என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் புரோமோஷன் காட்சிகளுக்காக, தன்னுடைய ரசிகர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், நடிகர் சூர்யா தன்னுடைய புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு தன்னை அழைத்ததாகவும், அதில், தல அஜித், மாதவன், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் கூறினார். மேலும், பேசிய பிரித்வி ராஜ், அஜித் குமாருடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்பொழுது அஜித்குமார் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.
அஜித்குமார் வெற்றிப் பெற்றால் ஆடுவதும் இல்லை, தோல்வி அடைந்தால் வாடுவதும் இல்லை. நான் அதனை அவரிடம் கற்றுக் கொண்டேன். நானும் அதனையே பின்பற்றியும் வருகின்றேன். நாம் வெற்றிப் பெற்றால் தலைகால் புரியாமல் ஆடுவோம். தோல்வி அடைந்துவிட்டால் சங்கடப்படுவோம். இவை இரண்டிலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது எப்படி என, அஜித்திடம் கற்றுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். இதனைத் தற்பொழுது, அஜித்தின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.