நடிகர் ரியாஸ்கானை சிலர் அடித்துள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரியாஸ்கான். தற்பொழுது, சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற டிவி சீரியலில் நடித்து வருகின்றார். அவருடைய மனைவி உமா ரியாஸ்கானும் நடிகை தான். அவருடைய மகனும், சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, தான் வசிக்கின்ற பனையூரில் பகுதியில், நடைபயிற்சி செய்துள்ளார். அப்பொழுது, அந்தப் பகுதியில் ஒரு சில இளைஞர்கள் ஒன்றாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்களிடம் சென்ற ரியாஸ்கான், சமூக ஊரடங்கு குறித்துப் பேசியுள்ளார்.
அப்பொழுது, அங்கிருந்த நபர்கள் ரியாஸ்கானுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கின்றது. இதனால், ரியாஸ்கானை அவர்கள் அடித்துள்ளனர். இது குறித்து, ரியாஸ்கான் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். கானாத்தூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.