பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்! தன்னம்பிக்கை கூறிய யுவி!

12 August 2020 அரசியல்
sanjaydutt.jpg

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு, நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்திற்கு, திடீரென்று மூச்சடைப்பு ஏற்பட்டது. அவரை அவசர அவசரமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், அவருக்கு ராபிட் கிட் மூலம், கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதா என, சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, அவருடைய நுரையில் பகுதியில் இருந்து சளியானது எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆக்சிஜன் அளவு 90% முதல் 92% வரை இருப்பது உறுதியானது. அத்துடன், அவருக்கு நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தற்பொழுது முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேன்சர் நோயில் இருந்து மீண்டவருமான யுவராஜ் சிங், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதற்குத் தன்னுடையக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், எனக்கு உங்கள் வலி புரிகின்றது. ஆனால், நீங்கள் மிகவும் வலிமையானவர். நீங்கள் ஒரு போராளி. என்னுடைய பிரார்த்தனைகளும், ஆதரவும் உங்களுக்கு உண்டு எனக் கூறியுள்ளார்.

HOT NEWS