நடிகர் சசிக்குமார் கடந்த சனிக்கிழமை அன்று, மதுரையில் சமூக சேவையில் ஈடுபட்டார்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவால், தமிழகம் முழுக்க பலத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இந்நிலையில், ஒரு சிலர் போலீசார் மற்றும் அரசாங்கத்தின் வேண்டுகோளை மதிக்காமல் வெளியில் சுற்றுகின்றனர்.
இதனைத் தடுக்கும் பொருட்டு, போலீசாருடன் இணைந்து அவர்களை வீட்டில் இருக்கும் படி, நடிகர் சசிகுமார் கேட்டுக் கொண்டார். அவர், மதுரை மாநகர போலீசாருக்காக வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.