காமெடி நடிகர் சதீஷிற்கு நேற்று காலையில், சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மதராசப்பட்டினம் மூலம், தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் அடியினை எடுத்து வைத்தவர் நடிகர் சதீஷ். தொடர்ந்து பலப் படங்களில் இவர் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இவர் வளர்ந்தார்.
நடிகர் விஜய் நடித்தப் பைரவா படத்தில், இவர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் சென்னையில் உள்ள, வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில், அவருடையக் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.
அதற்கு முன் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்படப் பல சினிமாப் பிரபலங்கள் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர்.