மதுரையில் அன்னதான சேவைக்காக நடிகர் சூர்யா 5 லட்ச ரூபாய் வழங்கி உள்ளார். இதற்கு மதுரையின் பாராளுமன்ற உறுப்பினரான, வெங்கடேஷன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பலரும் தங்களுடைய வருமானம் உட்பட பல விஷயங்களை இழந்துள்ளனர். வருகின்ற மே-17ம் தேதி வரை, இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், மதுரையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னா சேவை மூலம், தினமும் 3000 முதல் 3,500 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்குப் பலரும் தங்களுடைய ஆதரவினையும், உணவுப் பொருட்களுக்கான பணத்தினையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இதற்குத் தன்னுடைய பங்காக நடிகர் சூர்யா 5 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷன், சூர்யாவின் உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் நடிகர் சூர்யா, தற்பொழுது பண உதவி செய்து அன்னதான உதவியும் செய்து வருகின்றார். இதனை, அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.