சூர்யாவிற்கு கொரோனா! ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

08 February 2021 சினிமா
suriyaangry.jpg

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகின்றார். நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர் தற்பொழுது டிவீட் செய்துள்ளார்.

அதில், ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என்று கூறியுள்ளார். அவர் உடல்நலம் பெற வேண்டி பலரும் தங்களுடைய பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS