நடிகர் தவசிக்கு குவியும் உதவிகள்! திமுக எம்எல்ஏ சரவணன் இலவச சிகிச்சை!

17 November 2020 சினிமா
actorthavasi.jpg

உணவுக் குழாயில் ஏற்பட்ட கேன்சாரால் பாதிக்கப்பட்டு உள்ள நடிகர் தவசிக்கு, திமுக எம்எல்ஏ சரவணன் அவருடைய மருத்துவமனையில், இலவச சிகிச்சை வழங்கி வருகின்றார்.

நான் கடவுள், ஜில்லா, சுந்தரபாண்டியன், ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்டப் பலப் படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. அவர் தேனியில் தங்கி இருப்பவர். அவருக்கு உணவுக் குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளார். அவரிடம் போதியப் பணம் இல்லாதக் காரணத்தால் சிகிச்சைக்காக கஷ்டப்பட்டு வந்தார். அவருடைய மருத்துவத்தினைத் தன்னுடைய சூர்யா அறக்கட்டளை மூலம், நடிகர், மருத்துவர் மற்றும் அரசியல்வாதியான சரவணன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தன்னுடைய சரவணன மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றார் சரவணன். இதனை தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விரைவில், அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

HOT NEWS