நடிகர் விஜய் ஒன்றரை கோடி நிதியுதவி!

22 April 2020 சினிமா
vijaydonates.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்ட பல நிவாரண நிதிகளுக்கு பிரபலங்கள் முதல், குட்டி குழந்தைகள் வரை தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் என்ன உதவி செய்வார் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். தமிழ் மக்களின் பலப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர் நடிகர் விஜய். அவர் தொடர்ந்து மௌனமாக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று தன்னுடைய உதவித் தொகையினை அறிவித்துள்ளார்.

மொத்தமாக ஒன்றரைக் கோடி ரூபாய் அளவிற்கு, உதவித் தொகையினை அவர் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாயும், பெப்சி அமைப்பிற்கு 25 லட்சமும், கேரளாவிற்கு 10 லட்ச ரூபாயும், கர்நாடகத்திற்கு 5 லட்ச ரூபாயும், தெலுங்கானா மாநிலத்திற்கு 5 லட்ச ரூபாயும், பாண்டிச்சேரிக்கு 2 லட்ச ரூபாயும் வழங்கி உள்ளார். இதுமட்டுமின்றி, தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கும் தன்னுடைய பண உதவியினை வழங்கி உள்ளார். இதனை விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS