தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர், விஜய் சந்தித்து பேசியுள்ள புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன.
வருகின்ற 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பல நடிகர்களும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை குஷ்பு, தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் இருந்து, பாஜக கட்சிக்கு சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய், சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அவர்களிடம் அரசியல் குறித்து அவர் பேசியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் புதிய கட்சித் துவங்குவது குறித்து, அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்ஏசந்திரசேகர் பேசி வருவதால், விரைவில் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தினை அரசியல் இயக்கமாக மாற்றுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தன்னுடைய ஆதரவு யாருக்கு என விரைவில் அவர் அறிவிப்பார் என பலரும் கூறி வருகின்றனர். அவர் தன்னுடைய இயக்கத்தினை, அரசியல் கட்சியாக மாற்றினால் வரவேற்கின்றேன் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.