தமிழ் சினிமாவின் பெரும் இயக்குனர்களில் ஒருவரான விசு, மரணமடைந்தார். நேற்று முன்தினம் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு ஏற்கனவே சிறுநீரக சிகிச்சையானது செய்யப்பட்டு இருந்தது. இதனால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 வயதுடைய நடிகர் விசுவின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, மருத்துவ தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
அவருக்கு, திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். 1986ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படம் வெளியாகி, பெரிய வெற்றியினைப் பெற்றது. அந்தப் படத்திற்காக தேசிய விருதினை அவர் பெற்றார். மேலும், 1992ம் ஆண்டு வெளி வந்த நீங்க நல்லா இருக்கணும் என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலையில் அவருடைய பூத உடலுக்கு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. அவருடைய குடும்பத்தினருக்கு, பல அரசியல் தலைவர்களும், தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.