கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல சினிமாத்துறையின் சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
தமிழ் சினிமாத்துறையினரும், கடந்த வாரம் தொடங்கி சினிமா சூட்டிங்கிற்குச் செல்லாமல் உள்ளனர். இதனால், சினிமாவினை மட்டும் நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பெப்சி நிர்வாகத்திற்கு தங்களால் இயன்ற உதவியினை, நடிகர்கள் தாராளமாக மனமுவந்து செய்ய முன்வர வேண்டும் என, பெப்சி தலைவர் செல்வமணி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்கள் சார்பில் 10 லட்ச ரூபாயினை பெப்சி நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய சார்பில், 10 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார். நடிகரும் இயக்குநருமான பார்திபன் தன்னுடைய சார்பில், 250 மூடை அரிசியினை வழங்கியுள்ளார்.
நடிகர் மனோபாலா 25 கிலோ எடையுள்ள 10 மூடை அரிசியினை வழங்கியுள்ளார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோர் விரைவில் தங்களுடைய உதவியினை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.