நடிகை அனுபமாவின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது மட்டுமின்றி, அந்த கணக்கு மூலம், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது.
கொடி, பிரேமம் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்பொழுது, நடிகர் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப் போகாதே படத்தில், நடித்து வருகின்றார். இவர் டிவிட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் கணக்கு வைத்துள்ளார். அவர் அதன் மூலம், தன்னுடையப் படம் குறித்து அவ்வப்பொழுது புதிய தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், அவருடைய பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த பக்கத்தில் அனுபமாவின் தலையுடன் நிர்வாணமான பெண்ணின் புகைப்படம் ஒன்றும் வெளியானது. இதனால், அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி, அனுபமாவும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தினை வெளியிட்டுவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். உங்களுக்கு அம்மா, அக்கா, சகோதரிகள் இல்லையா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். அவருடையத் தலையுடன், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தினை வெளியிட்டு உள்ளதால், தற்பொழுது அம்மணி அனுபமா கடும் அப்செட்டில் உள்ளாராம்.