பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை! மன உளைச்சல் காரணமாக விபரீத முடிவு!

25 January 2021 அரசியல்
jayashreeramaiah.jpg

கடந்த மார்ச் மாதம் தொடங்கி, பல நடிகர் மற்றும் நடிகையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், தொடர்ந்து வருகின்றது.

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பாரதப் பிரதமர் மோடி உட்படப் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தனர். கடந்த மாதம், தமிழகச் சின்னத்திரை நடிகை விஜே சித்ராவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கன்னடா நடிகை ஜெயஸ்ரீ ராமைய்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பழைய பெங்களூருவில் தங்கி இருப்பவர் நடிகை ஜெயஸ்ரீ ராமைய்யா. இவர் கன்னட மொழியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவர் அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தது முதலே, மிகவும் மன இருக்கமான நிலையில் இருந்து வந்துள்ளார். அவர் மன அழுத்தத்துடன் போராடி தோற்று விட்டதாக அவரே ஒப்புக் கொண்டும் உள்ளார். காலையில், தன்னுடைய ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்காக ஆலாரமும் அவர் வைத்திருந்துள்ளார். அவர் தன்னுடைய பேஸ்புக் பதிவில், I quit. Goodbye to this fucking world and depression எனப் பதிவிட்டு உள்ளார்.

பேஸ்புக் லைவ்ல் அவர் பேசுகையில், நான் சுதீப் சாரிடம் எவ்வித உதவியினையும் எதிர்பார்த்து நான் இதைக் கூறவில்லை. என்னிடம் நல்ல அளவில் பணம் உள்ளது. ஆனால், என்னால் மன அழுத்தத்தினை வெல்ல இயலவில்லை. நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பணத்திற்காகவோ இதனை செய்யவில்லை எனவும் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம், தற்பொழுது கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS