விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டு இருக்கும் நாடகம் என்றால் அது அரண்மனைக் கிளி தான். திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நாடகத்தினை தமிழக மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.
அந்த அளவிற்கு, இந்த நாடகமானது தமிழக மக்களின் இதயத் துடிப்பாகவே மாறியுள்ளது. அந்த நாடகத்தில் இருந்து, பிரபல நடிகை நீலிமா விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் அந்த நாடகத்தில், துர்க்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அவர் தற்பொழுது அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அரண்மனைக் கிளி நாடகத்தில், மோனிஷா, பிரகதி, மைனா புகழ் நந்தினி, நீலிமா, தர்ஷன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். திரைப்பட நடிகை ராதா இந்த நாடகத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நாடகத்தில் இருந்து, விலகுவதாக நடிகை நீலிமா அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது குறித்து அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நான் கேமரா முன் நிற்கும்போது மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகவே உள்ளேன். குழந்தை நட்சத்திரம் முதல் தற்போது வரை நான் நடித்து வருகிறேன். பல மாற்றங்கள் என் நடித்து நிகழ்ந்த போதிலும் அதனை நான் ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ‘துர்கா நீ போய் வா’ எனக்கூறி நீங்கள் தான் என் பலம். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கூறியுள்ளார். இதனால், அரண்மனைக் கிளி ரசிகர்கள் தற்பொழுது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.