நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழில் மட்டுமின்றி, இந்தியாவின் பல நடிகர் நடிகையர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது தமிழ் நடிகையர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழில் டார்லிங், கலகலப்பு-2, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்டப் படங்களில் நடித்த முன்னணி நடிகை நிக்கி கல்ராணி. இவர் தற்பொழுது கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகின்றார். அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், தனக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
தனக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான சோதனைகள் நடைபெற்றதாகவும், காய்ச்சல், சுவையற்ற திறன், நுகர்வதில் பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்பட்டதால் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டதாகவும், அதில் லேசான அறிகுறிகள் இருப்பதால், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், வேறு எவ்வித உடல் உபாதைகளும் இல்லை என்பதால், விரைவில் மீண்டு விடுவேன் எனவும் கூறியுள்ளார்.