கன்னட நடிகை ராகினி திவேதி, போதைப் பொருள் பதுக்கல் வழக்கில், கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்துள்ள நிலையில், இந்தியத் திரையுலகில் போதைப் பொருட்கள் குறித்த பலத் தகவல்கள், தினமும் செய்தித் தாள்களில் வெளியான வண்ணம் உள்ளன. பாலிவுட்டில் பலரும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டப் பல மொழிகளில் நடித்து வந்தவர் ராகினி திவேதி.
இவர் வீட்டிற்குச் சென்று காவலர்கள், போதைப் பொருட்கள் விவகாரம் தொடர்பாக அவரைக் கைது செய்து உள்ளனர். தற்பொழுது தென்னிந்தியத் திரையுலகில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.