மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் சாய் பல்லவி. இவர் நடித்த பிரேமம் திரைப்படம், பட்டித் தொட்டி எங்கும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, அவருக்குத் தமிழிலும் வாய்ப்புகள் வந்தன. தனுஷ் நடித்த மாரி2 படத்தில், தனுஷிற்கு ஜோடியாக அவர் நடித்தார்.
இந்த சூழ்நிலையில், அவர் ஏற்கனவே ஜெயம்ரவியின் படத்தில் நடித்துள்ளதாக, அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாய் பல்லவியின் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றனர். ஜெயம்ரவி, கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான, தாம்தூம் படத்தில் சாய்பல்லவி சிறுமியாக நடித்துள்ள புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
அவர் 6ம் வகுப்புப் படிக்கும் பொழுதே, சினிமாக்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டார். அவர் தாம்தூம் படத்தில், நடிகைக் கங்கனா ரணாவத்துடன் இணைந்து உள்ள புகைப்படமானது, இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.