என்னைப் போன்று யாரும் தப்புப் பண்ணாதீங்க என, நடிகை சகிலா உருக்கமாகத் தெரிவித்து உள்ளார்.
1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில், ஆபாசப் படங்களின் மூலம், இந்திய அளவில் பிரசித்திப் பெற்றவர் சகிலா. தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் பெயரைச் சொன்னால் எந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் குசியாவார்களோ, அந்த அளவிற்கு சகிலாவின் பெயரினைக் கேட்டதும் குஷியாகிவிடுவர். அந்த அளவிற்கு, சகிலா தாராளமாக நடிப்பார். பெரிய மனம் கொண்டவராக இருந்து வந்த இவருக்கு, பல கோடி ரசிகர்கள் இந்தியா முழுவதும் இருந்து வருகின்றனர்.
இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாகத் தன்னுடையப் பயணத்தினைத் துவக்கிய இவர், காலப் போக்கில் கேரளாவின் நீலப் படங்களில் நடிக்கத் துவங்கினார். குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இவர் இவ்வாறு நடிக்கத் துவங்கினார். இவர் நடித்துள்ளப் படங்கள் திரையறங்கில் வெளியாகின்றது என்றால், ரசிகர்கள் அலைபோல் குவிந்து விடுவர். ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர், தற்பொழுது அப்படிப்பட்ட படங்களில் நடிப்பது கிடையாது.
வாழ்க்கையில் பலவித சறுக்கல்களைப் பார்த்த இவர், தன்னுடைய வாழ்க்கையினைப் பற்றி புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு சகிலா என்றப் பெயரிலேயே படம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பானது தற்பொழுது நடைபெற்றது. அதில் பேசிய சகிலா, என்னைப் போன்றத் தவறினை யாரும் செய்யாதீர்கள். படிக்கின்ற மாணவிகள், சினிமாவிற்கு வருபவர்கள், இளைஞர்கள், என யாரும் செய்யாதீர்கள்.
இதனைத் தான், நான் புத்தகமாக எழுதி இருக்கின்றேன். அதனைத் தான் படமாகவும் எடுத்துள்ளனர் எனக் கூறினார். இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.