தல அஜித்தினை திருமணம் செய்த பின்னர், படம் நடிக்காமல் இருந்து வந்த ஷாலினி தற்பொழுது மீண்டும் நடிக்க திட்டமிட்டு உள்ளாராம்.
காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷாலினி. அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அவர், பின்னர் தொடர்ந்துப் பலப் படங்களில் நடித்தார். தல அஜித்துடன் அமர்களம் படத்தில் நடித்த பொழுது, இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அலைபாயுதே படத்தில் நடித்த அவர் அஜித்தினை திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் தம்பதிக்கு, ஆத்விக் மற்றும் அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்குப் போட்ட ஷாலினி, தற்பொழுது மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படமானது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஷாலினி அஜித்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
அவ்வாறு அவர் அந்தக் கதாபாத்திரத்தினை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.