நடிகை ஸ்ரேயாவும், அவருடைய கணவரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஸ்பெயின் நாட்டில் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் அழகிய தமிழ்மகன், சிவாஜி உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. அவர் தன்னுடைய கணவருடன், தன்னுடைய திருமண நாளினைக் கொண்டாடுவதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. அதனால், அங்கு ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், ஸ்ரேயாவிற்கும், அவருடைய கணவருக்கும் பெரும் அச்சம் உண்டானதாக அவர் தெரிவித்தார். மேலும், தன் கவணருக்கு, காய்ச்சல், சளி முதலியவை உண்டானதாகவும், அதற்காக மருத்துவமனை சென்றதாகவும், ஆனால், ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இங்கு இருந்து சென்றுவிடுங்கள் இல்லையென்றால், உங்களுக்கும் தொற்று ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால், தங்கியிருந்த அறையிலேயே சமூக விலகலைக் கடைபிடித்ததாகவும் இருவரும் தனித்தனி படுக்கைகளைப் பயன்படுத்தியதாகவும், தினமும் யோகா செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.