14 வயதில் நடித்த பாலியல் படம் சமூக வலைதளத்தில் லீக்கானதால், சோனா எம் ஆபிரகாம் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
14 வயதில் பார் சேல் என்றப் படத்தில், பலாத்கார காட்சியில் நடித்து அறிமுகமானவர் சோனா எம் ஆபிரகாம். அவர் அந்தப் படத்தில் நடித்ததில் இருந்து, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில், நடிகை காதல் சந்தியாவிற்கு தங்கையாக சோனா நடித்திருந்தார். அவருடைய வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அந்த வீடியோக்களை பதிவு நீக்கம் செய்யுமாறு, புகார் அளித்திருந்தார் சோனா. ஆனால், அந்த வீடியோக்கள் நீக்கப்படாமல் உள்ளதால், மனமுடைந்த அவர் தற்பொழுது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அவரை, அவருடைய பெற்றோர்கள் பத்திரமாகக் காப்பாற்றி உள்ளனர். இது குறித்து, புதிய வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். சோனா.
அதில், நான் 14 வயதில் பார் சேல் படத்தில் நடித்தாகக் கூறும் சோனா, தன்னை வற்புறுத்தி பலாத்காரக் காட்சியில் நடிக்க வைத்தனர் என்றார். அப்பொழுது எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. இயக்குநர் சதீஷ் அனந்தபுரி தான், என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார் என்றுக் கூறியுள்ளார். அந்தப் பலாத்காரக் காட்சிகள் அனைத்தும், சென்சார் செய்யப்பட்டே திரையிடப் பட்டதாகவும், ஆனால் 2 ஆண்டுகள் கழித்து தற்பொழுது சென்சார் செய்யப்படாத காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன, எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார், முதல்வர் எனப் பலருக்கும் தன்னுடைய புகாரினை வழங்கியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இருப்பினும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.