ராம் கோபால் வர்மா பற்றி பதிவிட்ட ஸ்ரீரெட்டி!

06 March 2020 சினிமா
srireddyramgopal.jpg

பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நடிகை என்றால், அது ஸ்ரீரெட்டி மட்டுமே. அவர் தமிழ் நடிகர்கள் முதல், தெலுங்கு நடிகர்கள் வரை பலர் மீதும், பாலியல் புகார் கூறினார். அதுமட்டுமின்றி, நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபலங்களையும் புகார் கூறினார்.

இந்நிலையில், பேஸ்புக்கில் உள்ள தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில், அம்மணி படுஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குநர் ராம்கோபால் வர்மா, கொரோனா வைரஸை விட மோசமானவர். ஆனாலும், அவரை எனக்குப் பிடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

ராம் கோபால் வர்மாவினைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆபாசமான கருத்துக்கள், பேச்சுக்கள் மற்றும் பதிவுகளால், பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர். அவரை, நடிகை ஸ்ரீரெட்டிப் பிடிக்கும் என்றுக் கூறியுள்ளார். இது, தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS