மௌனராகம் சீரியல் நடிகை தற்கொலை! தொடரும் மரணங்கள்!

11 September 2020 சினிமா
swarani.jpg

பிரபல சீரியல் நடிகை ஸ்வரானி தன்னுடைய வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா ஊரடங்கானது அமலில் உள்ளது. இந்த சூழலில், மனசு மமதா, மௌளனராகம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்த இளம் நடிகை ஸ்வரானி. அவர் ஹைதராபாத் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில், தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வந்தார். அவர் நேற்று திடீரென்று, வீட்டின் கழிவறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால், அவருடைய பெற்றோர் அச்சம் அடைந்தனர். கழிவறையின் கதவினைத் திறந்து பார்த்ததில், அவர் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சடலத்தினை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்வரானியின் சகோதரர் சிவா என்பவர், தன்னுடைய சகோதரியினை தேவராஜ் ரெட்டி என்பவர் மிரட்டி வந்ததாக கூறியிருந்தார். தேவராஜ் ரெட்டிக்கும் ஸ்வரானிக்கும், டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருந்துள்ளது.

ஸ்வரானியினை தொடர்ந்து, தேவராஜ் ரெட்டி பிளாக் மெயில் செய்து வந்ததாக, சிவா கூறியிருந்ததைத் தொடர்ந்து, போலீசார் தேவராஜ் ரெட்டியிடம் விசாரணை செய்து வருகின்றனர். இளம் வயதில் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சின்னத்திரை உலகினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS