நடிகை விஜயலட்சுமி, சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானும், விஜயலட்சுமியும் இணைந்திருந்த பதிவுகள் இருந்தன.
இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, பலரும் இது குறித்துக் கலவையான விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில், சீமான் இதற்கு வழக்கம் போல நக்கலாகப் பதிலளித்தார். இதனிடையே, நாம் தமிழர் கட்சிப் பொதுக் கூட்டங்களில், நடிகை விஜயலட்சுமியினை அவதூறாகவும், கொச்சையாகவும் பேச ஆரம்பித்தனர்.
இதனால், மன வேதனை அடைந்த நடிகை விஜயலட்சுமி, தற்பொழுது ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், சீமான் மற்றும் அவருடைய தம்பிகளால், தான் பெருமளவில் மன உளைச்சலில் இருப்பதாகவும், தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதால், வெளியில் தலைக்காட்ட முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் பிரிவு துணை ஆணையர் அவர்களிடம், தன்னுடையப் புகாரினை அளித்துள்ளார்.