நடிகை விஜயலட்சுமி வீடி திரும்பினார்! உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல்!

29 July 2020 சினிமா
vijayalakshmisucide.jpg

தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, தற்பொழுது சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கடந்த சில வாரங்களாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக அடுக்கி வந்த நடிகை விஜயலட்சுமி, தன்னுடைய வாழ்க்கையினை சீமான் அழித்துவிட்டதாகவும், 2 வருடங்கள் அவருடன் வாழ்ந்ததாகவும் கூறி வந்தார். இது குறித்து, அடுக்கடுக்கான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தான் பீபி மாத்திரையினை அதிகளவில் எடுத்துக் கொண்டதாகவும், விரைவில் உயிர் பிரிந்து விடும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, அவருடைய இந்த செயலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம், விஜயலட்சுமியினை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாக, அவரே தன்னுடைய வீடியோப் பதிவில் தெரிவித்தார். அவருடைய சிகிச்சைக்கானப் பணத்தினையும் காயத்ரி ரகுராமே கட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில், தற்பொழுது அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். இது குறித்துப் பேசியுள்ள விஜயலட்சுமி, என்னிடம் கேட்காமலேயே என்னை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

எனக்கும் பாஜக உள்ளிட்ட எவ்விதக் கட்சிக்கும் தொடர்பில்லை. என்னுடைய தோழி காயத்ரி தான் எனக்கு உதவினார். நான் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப் போகின்றேன் என்றுக் கூறினார். அவரை, அவருடைய உறவினர்கள் காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

HOT NEWS