ஆதித்யா டிவி சேனலில், அட டேய் என்ற நிகழ்ச்சி சில வருடங்களாக, ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில், லோகேஷ் பாப் மற்றும் குட்டி கோபி ஆகியோர் இணைந்து வழங்கி வருகின்றனர். பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாகவும், கொஞ்சம் மொக்கையாகவும் இருக்கும் இந்த நிகழ்ச்சியானது, தமிழ் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாகவும் இருந்து வருகின்றது.
இதில் நடித்து வந்த லோகேஷ் பாப் என்பவர், நானும் ரவுடி தான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக, தலையில் அடிபட்டதாகவும், அதன் காரணமாக உடலின் வலது கால் மற்றும் வலது கை செயலிழந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு சென்னை ஸ்கைவாக் அருகில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால், குட்டி கோபி உள்ளிட்ட அவருடைய நண்பர்கள் சமூக ஊடகங்கள் மூலம், அவருடைய மருத்துவ செலவிற்கு நிதி திரட்டினர். இந்நிலையில், குட்டி கோபி நேராக சன் டிவி நெட்வொர்க்கிடம் விஷயத்தினைக் கூறியுள்ளார். அவருடைய மருத்துவ செலவினை, தாமே ஏற்பதாக பெரும் மனதுடன் சன் நெட்வொர்க் கூறியிருக்கின்றது.
இதற்காக நன்றி கூறி வீடியோ வெளியிட்ட குட்டி கோபி, லோகேஷ் தற்பொழுது நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என்றும் தன்னுடைய வீடியோவில் தகவல் அளித்துள்ளார்.