தாமரை அழுக்கில் தான் மலரும்! ஆதித்யா தாக்ரே அதிரடி பேச்சு!

19 December 2019 அரசியல்
adityathackeray.jpg

ஒரு வழியாக தற்பொழுது, மஹாராஷ்டிராவில் சிவசேனாத் தலைமையில் ஆட்சி அமைந்து விட்டது. இதனிடையே, அங்கு முதல் முறையாக சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. அப்பொழுது பேசிய ஆதித்யா தாக்ரே, தாமரை சாக்கடையில் தான் மலரும் எனக் கூறியுள்ளார்.

முதல் முறையாக சட்டசபையில் பேசிய ஆதித்ய தாக்ரே சுமார் 11 நிமிடம் பேசினார். அவர் பேசுகையில், ஒரு வழியாக ஒரு மாத ஆட்சி அமைப்பதற்கு முன், ஒரு மாதமாக மாபெரும் நடந்துவிட்டது. பாலாசாகேப் தாக்ரேவின் மகன் முதல்வராகவும், சரத் பவார் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் கூட்டணியுடன் ஆட்சி அமைந்து விட்டது.

பொதுமக்கள் தாமரையானது, களி மண்ணில் வளரும் என்கின்றனர். சட்டப்பேரவை தொடங்கியதில் இருந்தே பாஜகவினர் இதனை முடக்க முயற்சிக்கின்றனர். தற்பொழுது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே முக்கியம். வேலை வாப்பின்மையும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தவறான ஜிஎஸ்டி அமலால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பேசிய அவர் மஹாராஷ்டிராவில் சாக்கடையில் தான் தாமரை மலர முடியும் எனக் கூறியுள்ளார்.

Source:www.ndtv.com/india-news/lotus-blooms-in-dirt-aaditya-thackerays-dig-at-bjp-in-assembly-speech-2151215

HOT NEWS