அல்கொய்தாவின் ஆப்பிரிக்கா பிரிவு தலைவன் சுட்டுத் தள்ளப்பட்டார்!

08 June 2020 அரசியல்
soldiers.jpg

நேற்று பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், அல்கொய்தா அமைப்பின் ஆப்பிரிக்கா படைத் தலைவரான, அப்தெல்மலேக் பிரான்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

ஆப்பிரிக்காவின் பலப் பகுதிகளில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் பதுங்கியிருந்து, ஆட்கடத்தல், கொள்ளை அடித்தில், போதைப் பொருட்களை விற்றல், ஆயுத விற்பனை உள்ளிட்டப் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில், இதற்கு மூலக் காரணமாக இருந்து வந்த அந்நாட்டு அல்கொய்தா தலைவர் அப்தெல்மலேக் செயல்பட்டு வந்தார்.

அவரை பல வருடங்களாக பிரான்ஸ் நாட்டு, இராணுவத்தினர் தேடி வந்தனர். அவரைப் பிடிப்பதற்காக, பெரும் படையினை பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது. இந்த சூழ்நிலையில், மாலியில் அப்தெல்மலேக் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரைப் பிடிப்பதற்கு பிரான்ஸ் விமானப் பிரிவு களமிறங்கியது. இருப்பினும், இந்த விஷயம் அப்தெல்மலேக்கிற்குத் தெரிந்து விடும் என்பதால், அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதலில் அந்த தீவிரவாதி உட்பட, அவருடன் இருந்த பலத் தீவிரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இதனை, பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

HOT NEWS