11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு! ஓபிஎஸ் வாழ்த்து!

06 October 2020 அரசியல்
opseps.jpg

அதிமுகவில் நீடித்து வந்தக் குழப்பங்கள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பரபரப்பு நீடித்து வந்த நிலையில், தற்பொழுது வருகின்ற தேர்தலை சந்திப்பதற்காக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை, எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்றப் பிரச்சனையானது, நீண்ட காலமாக நீடித்து வந்தது. கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்தது. அத்துடன், அதிமுக கட்சிக்கு ஒரு வழிகாட்டுதல் குழுவினையும் நாம் அமைக்க வேண்டும் என, ஓ பன்னீர்செல்வம் கோரி வந்தார். அதனையும் அமைக்க வலியுறுத்தி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, ஓபிஎஸ் தான் அடுத்த முதல்வர் எனவும், இபிஎஸ் தான் அடுத்த முதல்வர் எனவும் அவர்ளுடைய ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி வந்தனர். இதனிடையே வருகின்ற அக்டோபர் 7ம் தேதி அன்று, அடுத்த முதல்வர் யார் என அறிவிக்கப்படும் என்று, கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் வழிகாட்டும் குழுவானது தற்பொழுது அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலையில், அதிமுக தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், கே.சி.பி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மற்றும் மாணிக்கம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

HOT NEWS