அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!

25 September 2019 அரசியல்
aiadmk.jpg

விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலினை, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தின் பிராதன கட்சிகளான, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே, வேட்பாளர் நேர்காணலை நடத்தியது. இந்நிலையில், விக்ரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தியும், நாங்குநேரித் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரும் களமிறங்குகின்றனர்.

இருப்பினும், இன்னும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது என, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிமுக தன்னுடைய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, விக்கிரவாண்டித் தொகுதியில் எஸ்.ஆர்.முத்தமிழ் செல்வன் மற்றும் நாங்குநேரித் தொகுதியில் வெ. நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில நாட்களாக, வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

HOT NEWS