அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவரின் காலானது நீக்கப்பட்டுள்ள சம்பவம், தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் இருப்பவர் அனுராதா. இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சாலையில் செல்லும் பொழுது, எதிர்பாராத விதமாக அதிமுக கொடி கம்பம் சாய்துள்ளது. அதில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார்.
இதில், எதிர்பாராத விதமாக வாகனம் சறுக்கியதில், நிலைத் தடுமாறி கீழே விழுந்தவருடைய கால்கள் மீது, பின்னால் வந்த லாரி ஏறியுள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார் ராஜேஸ்வரி என்ற அனுராதா.
அக்கம்பக்கம் இருந்தவர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அவருடைய இடது காலானது தற்பொழுது அகற்றப்பட்டு உள்ளதாக, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வருந்தும் அப்பெண்ணின் உறவினர்கள், அப்பகுதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த, கொடி கம்பம் சரிந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், அதனை போலீசார் மறைப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.