நிலமைக்கு பல்கலைக் கழகத் தேர்வுகள்-ஏஐசிடிஈ! அண்ண பல்கலை புது அறிவிப்பு!

06 June 2020 அரசியல்
annauniversity.jpg

மாநிலங்களில் நிலவும் நிலமைக்கு ஏற்ப அந்தந்த மாநில பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை நடத்தலாம் என, ஏஐசிடிஈ தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் காரணமாக, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்னும் கடந்த பருவத்திற்கான தேர்வுகள் இன்னும் நடைபெறாமல் உள்ளன.

இந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித தகவல்களைத் தெரிவித்து வருகின்றன. இது குறித்து, ஏஐசிடிஈ அமைப்பிற்கு மாணவர்கள் தங்களுடையப் புகார்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது குறித்து, தற்பொழுது புதிய அறிக்கை ஒன்றினை ஏஐசிடிஈ தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்தந்த மாநிலங்களில் நிலவும் நிலமையைப் பொறுத்து தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றுக் கூறியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய புகார்களை, அந்தந்த கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும், விரைவில் எவ்வாறு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பதுக் குறித்த அறிவிப்பானது வெளியாகும் என்றுக் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பொறியியல் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக் கழகம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுவாக ஒவ்வொர பாடத்திற்கும் ஐந்து யூனிட்கள் இருக்கும். அந்த ஐந்து யூனிட்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். இந்த முறை, வெறும் நான்கு யூனிட்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் எனவும், அவைகளைப் படித்தால் போதும் எனவும் கூறியுள்ளது.

தற்பொழுது வரை, அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு கட்டுப்பட்ட கல்லூரிகளில் வெறும் நான்கு யூனிட்களே நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐந்தாவது யூனிட்டினை நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் கூறி வந்ததை அடுத்து, இந்த முடிவானது அண்ணா பல்கலைக் கழகத்தால் எடுக்கப்பட்டு உள்ளது. இதனை, மாணவர்கள் வரவேற்று உள்ளனர்.

HOT NEWS