ஏர் இந்தியாவினை வாங்குபவர்கள் அதன் கடனையும் ஏற்க வேண்டும்! மத்திய அரசு அறிவிப்பு!

14 September 2020 அரசியல்
airindia.jpg

ஏர் இந்தியா நிறுவனத்தினை வாங்க முன் வருபவர்கள், அதன் கடன் சுமையினையும் ஏற்க வேண்டும் என, மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

இந்தியாவின் அரசு விமான சேவையினை, ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் சர்வதேச தரத்தில், உலகின் பல நாடுகளுக்கு தன்னுடைய விமான சேவையினை வழங்கி வருகின்றது. இந்த விமான நிறுவனமானது, தற்பொழுது நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. இதன் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும், நிறுவனத்தினை தொடர்ந்து நடத்துவதற்காகவும் இந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றது.

இதற்குத் தற்பொழுது 23,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது. இதனை மத்திய அரசால் சமாளிக்க முடியவில்லை. நஷ்டத்தில் இயங்கி வருகின்ற ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான டென்டரையும் அறிவித்தது. இந்த சூழ்நிலையில், புதிய அதிரடி அறிவிப்பினையும் மத்திய அரசு தற்பொழுது வெளியிட்டு உள்ளது.

அதன்படி, இந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை வாங்க இருப்பவர்கள், அந்த நிறுவனத்தின் கடன் சுமையாக இருக்கும் 23,000 கோடியினையும் ஏற்க வேண்டும் எனவும் அறிவித்து இருந்தது. இதனால், இந்த நிறுவனத்தினை வாங்குவதற்கு, பெரிய அளவில் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், இந்த நிறுவனத்தினை சந்தை மதிப்பில் விற்காமல், நிறுவனத்தின் மதிப்பிலேயே விற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS