ஏர் இந்தியா ஊழியர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் விடுமுறை!

27 July 2020 தொழில்நுட்பம்
aircraftmissing.jpg

ஏர் இந்தியா நிறுவனம் வருமான இழப்பு மற்றும் பண நெருக்கடிக் காரணமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை கட்டாய விடுமுறை வழங்கியுள்ளது.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருகின்ற ஏர் இந்தியா நிறுவனமானது, தனியாருக்கு கடந்த மார்ச் மாதம் விற்கப்பட இருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவ ஆரம்பித்து விட்டதால், லாக்டவுன் காரணமாக, இந்த விற்பனையானது தள்ளிப் போனது. இதற்கிடையே, விமானப் போக்குவரத்தினை இந்த மாதம் வரை, மத்திய அரசு தடை செய்து உள்ளதால், ஏர் இந்திய நிறுவனத்திற்கு பெருமளவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய பணப் பிரச்சனை மற்றும் கடன் தொல்லைகளை சமாளிக்க, தன்னுடைய பணியாளர்களை குறைத்தும், வேலையினை விட்டு நிறுத்தியும் வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, அந்த நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்ற பலத் தரப்பட்ட தொழிலாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பைலட்கள் முதல் சிப்பந்திகள், அலுவலக ஊழியர்கள் வரை, பலரையும் இவ்வாறு கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த விடுமுறையானது 2 முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களின் எதிர்காலமும் தற்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது.

HOT NEWS