இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்த டெல்லி! காற்று மாசு குறைய ஆரம்பித்தது!

06 November 2019 அரசியல்
delhiairpolution.jpg

டெல்லியில் தீபாவளியன்று முதல், கடும் காற்று மாசுபாடு நிலவி வருகின்றது. டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களில், விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்குத் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும், இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகின்றது.

இதனால், டெல்லியில், மீண்டும் ஆட் மற்றும் ஈவன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு அலுவலங்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டது. பொது போக்குவரத்து வாகனங்கள் குறைக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, மெட்ரோ ரெயிலின் சேவையானது அதிகரிக்கப்பட்டது.

நேற்று மாலை, டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு குறித்து, பிரதமர் மோடி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், கேட்டறிந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற இருந்த பள்ளித் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது, நேற்று மாலை முதல் மிக மோசம் என்ற நிலையில் இருந்து, மோசம் என்ற நிலைக்கு டெல்லியின் காற்று மாசுபாடு குறைந்துள்ளது. மேலும், பின்வரும் நாட்களில் டெல்லியில் காற்றின் மாசுபாடு குறைந்துவிடும் எனவும் நம்பப்படுகிறது.

HOT NEWS