இன்று பலத்த எதிரப்பார்ப்புகளுக்கிடையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், வெளியாகியுள்ள ஐயரா திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, கலையரசன் போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நயன்தாரா. நயன்தாராவை மிக முக்கியமான கதாப்பாத்திமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படங்களில், இந்த படமும் ஒன்று.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஹாரர் மூவி. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, நயன்தாரா காட்சியளிக்கிறார். ஒரு பேய் தான் யாரைக் கொல்லப் போகிறேன், என்று கூறுகிறது. பின் அவர்களை கொல்கிறது. அப்பேயின் கதை என்ன, இறுதியில் என்ன ஆனது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.
படம் முழுக்க, விவசாய நிலங்களையும், பசுமையான பகுதிகளையும் மிக அழகாக காட்டியுள்ளனர். மேலும், படம் முழுக்க ஒருவித எதிர்ப்பார்ப்பை நடிகர்களும், பின்னணி இசையும் உருவாக்குகிறது.
படத்தின் இசை, முழுக்க முழுக்க, நம்மை படத்துடன் ஒன்றிணைக்கிறது.
இவரை நம்பித் தான் படத்தையே எடுத்துள்ளனர். அவரும் நம்பிக்கையைக் காப்பாற்றயுள்ளார்.
ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் உண்மைத் தன்மைக்கு வலுசேர்க்கிறது.
படத்தில் வரும் பிற நடிகர்கள் அனைவருமே, தங்களுடைய கடமையை சரியாகச் செய்துள்ளனர்.
படத்தின் விளம்பரம். படம் வெளியாவதற்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே, இப்படத்தின் விளம்பர வேலையில், கேஜேஆர் நிறுவனம் இறங்கியதால், படத்தினை அனைவரும் பார்க்க வேண்டும் என, எதிர்ப்பார்ப்பார்க்க ஆரம்பித்தனர்.
படத்தின் சொதப்பலான விஷயங்கள்!
படத்தில் கதையே ஒரு விதமாக ஏற்றுக் கொள்ளமுடியுமா, அல்லது முடியாதா என நம்மையே இரண்டு விதமாக யோசிக்கவைத்துவிடுகிறது.
படத்தின் திரைக்கதையில், பல இடங்களில் லாஜிக்குகள் இடிப்பதால், ஒரு சில சீன்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.