டெல்லியில் குறைய ஆரம்பித்தது காற்று மாசு! மக்கள் நிம்மதி!

29 November 2019 அரசியல்
airpollution.jpg

சா.பா.ர் (சிஸ்டம் ஆப் ஏர் குவாலிட்டி அன்ட் வெதர் போர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச்) அமைப்பின் தகவலின் படி, டெல்லியில் தற்பொழுது காற்றிலுள்ள மாசின் அளவு கிட்டத்தட்ட கால்வாசியாக குறைந்து விட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக, டெல்லியில் காற்று மாசுபாட்டின் காரணமாக, அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பெருமளவிலான வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆட்-ஈவன் முறைப் பின்பற்றப்பட்டது. மேலும், புதிய கட்டிடப் பணிகள் அனைத்தும் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, மிக அபாயகரமான நிலைமையில் இருந்து வந்த டெல்லி காற்று மாசின் அளவானது, தற்பொழுது மிதமான சூழ்நிலைக்குத் திரும்பியுள்ளது. ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் எனப்படும் அளவீட்டின் படி, சென்ற வாரம் 400 என்ற அளவில் இருந்து வந்த காற்று மாசானது, தற்பொழுது நான்கு மடங்கு குறைந்து 100 என்ற அளவில் உள்ளது.

இதனால், டெல்லியில் மீண்டும் இயல்பு வாழ்க்கையானது, திரும்ப ஆரம்பித்து உள்ளது. பொதுமக்களும் வெளியில் வழக்கம் போல நடமாட ஆரம்பித்து உள்ளனர். வாகப் போக்குவரத்தும் சீராகி வருகின்றது. ஏர்குவாலிட்டி இன்டெக்ஸ் என்ற அளவீட்டின் படி, 0-50 என்பது நல்லது எனவும், 50-100 என்பது பரவாயில்லை எனவும், 101-200 என்பது நடுத்தரம் எனவும், 201-300 என்பது மோசம் எனவும், 301-400 என்பது மிக மோசம் எனவும் 400-500 என்பது அபாயகரமானது, நச்சுத் தன்மை உள்ளது எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS