ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, தொலைத்தொடர்புத் துறையில், பல சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஜியோவின், இலவசமாக பேசும் வசதியினை வழங்கியதன் காரணமாக, பெரும்பாலான மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், ஜியோ நிறுவனத்திற்கு மாறினர். இதனால், ஐடியா மற்றும் ஏர்செல் நிறுவனங்களை மற்ற நிறுவனங்கள் வாங்கின. தற்பொழுது, ஜியோ, வோடாபோன் மற்றும் ஏர்டல் நிறுவனங்களே களத்தில் உள்ளன.
இந்நிலையில், ஜியோவின் போட்டியினை சமாளிக்க, இலவச இண்டர்நெட் மற்றும் பேசும் வசதியினையும் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனம் அளிக்க ஆரம்பித்தன. மாதம் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், மாதம் முழுவதும் இணையம் மற்றும் இதர சேவைகளை இலவசமாகப் பெறலாம் என்னும் கவர்ச்சிகரமானத் திட்டத்தினால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் சேவைகளைத் தொடர்ந்துப் பயன்படுத்தினர்.
மேலும், இந்தியாவில் அதிவேக இணைய வசதி அளிப்பது ஏர்டெல் என்ற அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியானதால், ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து, ஜியோவிற்கு மாறுபவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இந்நிலையில், சென்ற வாரம் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வசூல் செய்ய உள்ளதாக, ஜியோ நிறுவனம் அறிவித்தது.
ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களிடம் பேசும் பொழுது, இலவசமாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால், மற்ற நிறுவனங்களுக்குப் போன் செய்யும் பொழுது 6 பைசா செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பிரச்சனை ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்களுக்கு இல்லை.
மேலும், ஜியோ நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பொருட்டு, இனி 25 வினாடிகள் மட்டுமே போன் செய்தால், ரிங் போகும். பின்னர், கட்டாகி விடும் என, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஜியோ நிறுவனம் தற்பொழுது மாபெரும் பொருளாதார சிக்கலை சந்திக்க உள்ளது.